Damus
lemon profile picture
lemon
☣️☣️☣️☢️☢️☢️

பாட்டுடைத் தலைவன்: ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் ஓவியர் குடும்பத்தில் பிறந்தவன். மிகுந்த வள்ளன்மையுடையவன். மாவிலங்கை என்ற ஊரைத் தன் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். ஓய்மான்நாடு திண்டிவனம் அருகில் உள்ள நாடு. அவனுடைய நாட்டில் வேலூர், கிடங்கில், ஆமூர், எயிற்பட்டினம் ஆகிய ஊர்கள் இருந்தன. அவன் பகைவர்களின் மிகுதி கண்டு அஞ்சி முருகனை வழிபட்டான் என்றும், முருகன் அவன் கனவில் தோன்றி, “இவ்வூர்க்கண் உள்ள ஒரு கேணியில் பூத்த பூவைப் பறித்து நின் பகைவர் மேல் விடுதி” என அருளினார் என்றும், அவ்வாறே இவனும் அப்பூவைப் பறித்துப் பகைவர் மேல் எறிய, அது வேல் ஆகிச் சென்று பகைவரை அழித்தது என்றும் இக்காரணத்தால் தான் அவ்வூர் வேலூர் என வழங்கப்பட்டது என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையால் அறியலாம். இவனுக்காகப் புறத்திணை நன்னாகனார் எழுதிய பாடல்கள் இரண்டு புறநானூற்றில் கிடைத்துள்ளன